64வது கூட்டுறவு வாரவிழாவையொட்டி பெரும்பேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 2 சுய உதவிக் குழுவிற்கு கடன்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2017      காஞ்சிபுரம்
Kanchipurami 2017 11 20

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த பெரும்பேடு ஊராட்சியில் பெரும்பேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கிவருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் பெரும்பேடு, ஜம்பேரி, அம்மணம்பாக்கம், ஈச்சங்கரணை, நடுவக்கரை, குண்ணவாக்கம், கருமாரப்பாக்கம், மேட்டு கருமாரப்பாக்கம், பெரியகாட்டுப்பாக்கம், சின்னக்காட்டுப்பாக்கம், ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் 5741 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

 நலத்திட்ட உதவிகள்

பெரும்பேடு கூட்டுறவு சங்கத்தில் 64வது கூட்டுறவு வார விழாவையொட்டி உறுப்பினர் கல்வி முகாம் நடந்தது. முகாமிற்கு கூட்டுறவு சங்கத் தலைவர் ரத்தினம் தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் கூட்டுறவு சார்பதிவாளர் கள அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பெரும்பேடு கூட்டுறவு சங்க செயலாளர் அருணகிரி வரவேற்றார்.

இதில் செங்கல்பட்டு சரக துணைப் பதிவாளர் சாய்ராம் சிறப்பாளராக கலந்துகெர்ண்டு உரையாற்றினார். முகாமின்போது சுய உதவிக் குழுக்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இங்கு செயல்படும் பொதுசேவை மையம் தொடர்ந்து 5 வருடங்களாக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவைபுரிந்ததற்காக மாவட்ட ஆட்சியரின் பாராட்டும் கேடயமும் பெறப்பட்டுள்ளது.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து