முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

புதன்கிழமை, 22 நவம்பர் 2017      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் பில்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,   நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை இணைந்து டெங்கு கொசு ஒழிப்பிற்கென மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கலெக்டர் இல.சுப்பிரமணியன், அவர்களின் நேரடிப் பார்வையில், டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் பில்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் தெரு, முருங்கப்பாளையம் தெரு, பாரதி தெரு, தெற்கு தெரு, காமன்கோவில் தெரு, போஸ்ட் ஆபீஸ் தெரு ஆகிய பகுதிகளில், வீடு வீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு உள்ளதா எனவும், கழிவுநீர் வாய்க்கால்கள், தேவைற்ற பொருட்களான பழைய டயர்கள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், ஆட்டுஉரல்கள் ஆகியவற்றில் நீர் தேங்கி உள்ளதா எனவும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், சாலைகளை சீரமைக்கவும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை சுத்தமாக பராமரிக்கவும், குப்பைகளை உடனுக்குடன் சுத்தம் செய்யவும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கலெக்டர்  உத்தரவிட்டார். மேலும், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்தும், டெங்கு கொசு ஒழிப்பு குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக பராமரித்தாலே டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வி.மகேந்திரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.சவுண்டம்மாள், விழுப்புரம் வட்டாட்சியர் சுந்தரராஜன், கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசமூர்த்தி, நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து