முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடிக்கு ராகுல் டுவிட்டரில் கேள்வி

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: குஜராத்தில் பழங்குடியின மக்களுக்கான 55,000 கோடி ரூபாய் திட்டம் என்ன ஆனது என்று  பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
 குஜராத்தில் பழங்குடியின மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை பா.ஜ.க. அரசு அறிவித்தது. அவர்களுக்காக 55,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியது. ஆனால் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக பழங்குடியின மக்களின் நிலம் பறிக்கப்பட்டுள்ளது. தங்கள் வாழிடமான வனப்பகுதியில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் கட்டித்தரப்படவில்லை.

நிலமின்றி, வேலைவாய்ப்பின்றி குஜராத் இளைஞர்கள் தவிக்க விடப்பட்டுள்ளனர். குஜராத்தில் 22 ஆண்டுகாலம் ஆட்சி நடத்தி வரும் பா.ஜ.க பழங்குடியின மக்களின் நலனுக்கு எதையும் செய்யவில்லை. இது பற்றி பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். இவ்வாறு ராகுல்  காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து