முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்கு வைகை அணையிலிருந்து கூடுதல் நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் குடிநீருக்கு மேலும் கூடுதலாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்,.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள குடிநீர் தேவையினை பூர்த்தி செய்ய வைகை அணையிலிருந்து, வைகை பூர்வீக பாசனபகுதி 3 மற்றும் 2-க்கு குடிதண்ணீருக்காக முறையே 1071.36 மி.க. அடி மற்றும் 457.92 மி.க. அடி தண்ணீரை வைகை ஆற்றுப் படுகையை நனைக்கும் வகையில் வைகை ஆற்றில் 5 ம்தேதி முதல் 10-ம் தேதி வரை மற்றும் 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை திறந்து விட ஏற்கெனவே ஆணையிடப்பட்டுள்ளது. மேற்சொன்ன இரண்டு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் தங்களின் பகுதியிலுள்ள ஆற்றுப்படுகை மழை இல்லாமல் வறண்டு போய் உள்ளதால்,வைகை அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடுமாறு வேண்டியுள்ளனர்.

பொதுமக்களின் வேண்டுகோளினை ஏற்று, வைகை ஆற்றில் தற்போது திறந்து விடப்பட்டு வரும் தண்ணீருடன், கூடுதலாக இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு முறையே 148.64 மி.க. அடி மற்றும் 65.08 மி.க.அடி தண்ணீரை திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து