முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்ஆப்பிரிக்காவை, டெஸ்ட் போட்டியில் நேரடியாக எதிர்கொள்கிறது இந்திய அணி

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் இந்தியா அணி ஜனவரி 5-ந்தேதி நேரடியாக தென்ஆப்பிரிக்காவை முதல் டெஸ்டில் சந்திக்கிறது.

சுற்றுப் பயணம்

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் அடுத்த மாதம் 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. தற்போது இந்தியா இலங்கைக்கு எதிராக விளையாடுகிறது.

ஒரேயொரு ஆட்டம்

ஒருநாள் போட்டி நடைபெற்று வரும் நிலையில் டி20 கிரிக்கெட் தொடர் 20-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. அதன்பின் இந்தியா 27-ந்தேதி நள்ளிரவு தென்ஆப்பிரிக்கா புறப்படுகிறது. போட்டிக்கு மிகவும் குறைவான நாட்களே உள்ளதால் இந்தியா இரண்டு நாட்கள் கொண்ட ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.

பயிற்சி ஆட்டம் ரத்து

இந்நிலையில் நேற்று அந்த இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா எந்தவித பயிற்சி ஆட்டத்திலும் விளையாடாமல் நேரடியாக கேப்டவுன் டெஸ்டிற்கு செல்கிறது. இதுதொடர்பாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூறுகையில் ‘‘எரோலக்ஸ் போலந்து பார்க்கில் இந்தியா இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் என்று அறிவித்திருந்தோம். தற்போது அந்த இடத்தில் பயிற்சி ஆட்டம் நடைபெறாது. அதற்குப் பதிலாக இந்தியா இரண்டு நாட்களாக பயிற்சியில் ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.

டெஸ்டில் களம் ...

மேலும், மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் அரைமணி நேரத்திற்கு முன்னதாகவும், 6 ஒருநாள் போட்டிகளில் 5-வது மற்றும் 6-வது போட்டிகளிலும் அரைமணி நேரம் முன்னதாக தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால், எந்தவித பயிற்சி ஆட்டத்திலும் விளையாடாமல் இந்தியா நேரடியாக கேப்டவுன் டெஸ்டில் களம் இறங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து