சங்கரன்கோவில் அனுமன் கோவில் அனுமன் ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2017      திருநெல்வேலி
hanuman jeyanthi crowd

சங்கரன்கோவிலில் ரயில்வேபீடர் ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அனுமன் கோவிலில் அனுமன் பிறந்த அமாவாசை முலம் நட்சத்திர தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசியாக நடந்தது.

சிறப்பு அபிஷேகங்கள்

காலை 6.00 மணி அளவில் தொடங்கி அனுமனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமும் அதனை தொடர்ந்து 11.30 மணிக்கு சிறப்பான சஹஸ்ரநாம அர்ச்சனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு விசேஷசோடஸ தீபராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் சங்கரன்கோவில் சுற்று பகுதிகளில் இருந்து ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அய்யாச்சாமி, சரவணாஸ்வாமி, மற்றும் அர்ச்சகர்கள், செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து