நிதி நிலை குறித்து ஆலோசிக்க சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் புதுவை சபாநாயகர் வைத்திலிங்கத்திற்கு அன்பழகன் எம்எல்ஏ கடிதம்

ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2017      புதுச்சேரி

புதுவை சட்டமன்ற அதிமுக கட்சித் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.எல்.ஏ.பேட்டி

உப்பளம் தொகுதி ஆம்பூர் சாலையில் உள்ள முகவதியா பள்ளி வாசலை கடந்த 8-ந் தேதி சில விஷமிகள் கல்லால் தாக்கி கண்ணாடியை உடைத்தனர். இது தொடர்பாக காவல் துறையிடம் பள்ளி வாசல் நிர்வாகிகளோடு புகார் செய்தோம். காவல் துறையினர் உட்பட பலர் விசாரித்தனர். திருட்டு தொடர்பாக கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. முதல்வர், திமுகவினர் உள்ளிட்ட பலர் வந்து பார்வையிட்டனர். அப்போதே நாங்கள் இதை அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம். என் தொகுதி பலதரப்பட்ட மக்கள் வாழும் பகுதி. 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட முஸ்லீம் குடும்பத்தினரும், 3 ஆயிரம் கிறிஸ்;;தவர்களும், ஆயிரம் தலித்துக்களும், ஆயிரம்மீனவர்களும், இந்து மதத்தினரும் உள்ளனர். புதுவை மத ரீதியில்கலவர பூமி அல்ல. போலி மத சார்பின்மையை பேசுபவர்கள் தூண்டி விட்டாலும் மத கலவரம் புதுவையில் வராது. அனைத்து மதத்தினரும் வாழும் உப்பளம் தொகுதியில் அனைத்து மக்களும்  நல்லிணக்கத்தோடு வாழந்து வருகின்றனர். எம்எல்ஏ என்ற முறையில்மக்களிடையே அமைதியை ஏற்படுத்தி உள்ளேன். ஆனால் பள்ளி மீதான தாக்குதல் சம்பவம் சிறிய சம்பவம். உண்மை நிலையை உணராத சிலர் மத கலவரத்தை தூண்டும் வகையில் பல்வேறு ஜாதி அமைப்புள், கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது மத கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது. அவர்களில் சிலர் பேசியதை கண்காணித்திருந்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யும் அளவுக்கு பேசியுள்ளனர். இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. கம்யூனிஸ்டு கட்சியினர் மக்களுக்காக பல போராட்டங்களை நடத்துகின்றனர். இது போன்ற மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் போராட்டத்தில் பங்கேற்க கூடாது. உப்பளம் தொகுதியை கலவர பூமியாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். 68 கோவில் உண்டியல் உடைக்கப்பட்டது. சிலைகள் கடத்தப்பட்டுள்ளது. இதன் மீது யாரும் அரசியல் சாயம் பூசவில்லை. இது குறித்து காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கும். உப்பளம் தொகுதி மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால்  மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை முதல்வர் இது போன்ற அமைப்புகளை ஊக்குவித்து வருகிறார். கவர்னர் இந்த அமைப்புகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவம் நடந்து 8 நாட்கள் ஆகியும் காவல் துறை சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நட்வடிக்கை எடுக்க வில்லை. உடனடியாக பள்ளி வாசளை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும். புதுவை நிதிநிலை குறித்து முதல்வர் மற்றும் அமைச்சர் தொடர்ந்து பல கருத்துக்களை கூறி வருகின்றனர். அமைச்சர் கந்தசாமி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்றார். ஆனால் முதல்வர் அதை மறுத்தார். தற்போது கவர்னர் நிதி நிலை தொடர்பாக உண்மை நிpலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்று கூறியுள்ளார். அதே கடமை கவர்னருக்கும் உள்ளது. நிதி நிலையை சீர் அமைக்க கவர்னர் எம்எல்ஏக்களை அழைத்து ஆலோசனை நடத்தலாம். நாங்கள ஆக்க பூர்வமான கருத்துக்களை தெரிவிப்போம். அதிமுக சார்பில் தற்போது நாங்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். அந்த கடிதத்தில் நிதி நிலை தொடர்பாக மக்களிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை தெளிவு படுத்த வேண்டும். 2 ஆண்டில் ஏன் நிதி நெருக்கடி ஏற்பட்டது? நிதி நெருக்கடியை தீர்க்க ஆக்கபூர்வமான ஆலோசனைகளை நாங்கள் தர தயாராக உள்ளோம். நிதி நிலை குறித்து முதல்வர் தன் கருத்துக்களை மக்களிடம் தெரிவிக்கும் வகையில் உடனடியாக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளோம். மேலும் நிதி நெருக்கடியில் இருந்து அரசை மீடக் சட்டமன்றத்தை கூட்ட கவர்னரே உத்தரவிடலாம். இது குறித்து கவர்னருக்கும்  கடிதம் எழுத உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து