ஆடை வடிவமைப்பு தொழில் பயிற்சி முகாம்: கலெக்டர் இல.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 19 டிசம்பர் 2017      விழுப்புரம்
viluppuram collector

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில், இந்திய அரசு குறு, சிறு, நடுத்தரத்தொழில் முனைவோர் வளர்ச்சி நிறுவனம் மற்றும் பசுமைத்தமிழகம் இணைந்து நடத்திய ஆடை வடிவமைப்பு தொழில் பயிற்சி முகாமினை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,   குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இக்கூட்டத்தில் கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  பேசியதாவது:தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை தீட்டிச் செயல்படுத்தி வருகிறது.

தொழில் பயிற்சி முகாம்

அதன்படி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலமாக குக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, சுயதொழில் செய்வதை ஊக்குவிக்கும் வண்ணம் பல்வேறு தொழிற்பயிற்சி முகாம்களை அரசு தொடங்கி, நடத்தி வருகிறது.  “கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” என்ற இலக்கணத்திற்கு ஏற்ப, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில், அரசு இதுபோன்ற சிறப்பு சுய தொழில் பயிற்சி முகாம்களை நடத்துகிறது.இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ள, 6 வார கால ஆடை வடிவமைப்பு தொழிற்பயிற்சியினை கற்க வந்துள்ள அனைவரும், இப்பயிற்சி முகாமினை நன்கு பயன்படுத்தி, சுயமாக தொழில் தொடங்க வேண்டும்.  உங்களுடைய சுய தொழில் வளர்ச்சிக்கு அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், இந்திய அரசு குறு, சிறு, நடுத்தரத் தொழில் முனைவோர் வளர்ச்சி நிறுவன உதவி இயக்குநர் கி.கந்தசாமி, விழுப்புரம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராஜகணேஷ், பசுமைத்தமிழகம் நிறுவனர் பேராசிரியர்.தீரன், கிராம பருவ நிறுவன தலைவர் மதியழகன், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து