முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வர்த்தக செய்திகள்

சனிக்கிழமை, 23 டிசம்பர் 2017      வர்த்தகம்
Image Unavailable

Source: provided

வெங்காயம் விலை குறைந்தது

தென் மாவட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாம்பார் வெங்காயம் இதற்கு முன்பு 1 கிலோ ரூ.200 வரை விற்கப்பட்டது. ஆனால் இப்போது விலை குறைந்து 1 கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மழையின் காரணமாக காய்கறி விளைச்சல் அதிகமாகி உள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து அதிகமாக காய்கறிகள் வருகிறது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை ரூ.198 உயர்வு

சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.198 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.22,120-க்கு விற்பனையானது. கடந்த (நவம்பர்) மாதம் தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.192 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 120 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.21 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,765-க்கு விற்பனையானது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 600 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.60 ஆக இருந்தது.

டி.சி.எஸ்-க்கு 225 கோடி டாலர் ஒப்பந்தம்

டி.சி.எஸ் நிறுவனத்துக்கு 225 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கிடைத்திருக்கிறது. தொலைக்காட்சி ஒளிபரப்புகளை அளவீடு செய்யும் நிறுவனமான நீல்சன் இந்த ஆர்டரை வழங்கி இருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதம் கையெழுத்தானது.
இந்த 2 நிறுவனங்களும் ஏற் கெனவே இணைந்து செயல்பட்டு வந்த நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 2 நிறுவனங்களும் கடந்த 2008-ம் ஆண்டு முதல் இணைந்து செயல்படுகின்றன.

பிட்காயின் மதிப்பு குறைந்தது

வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான பிட்காயின் மதிப்பு மிகவும் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமானது. நேற்று முன்தினம் வர்த்தகத்தில் ஒரு பிட்காயின் மதிப்பு 13,000 டாலருக்கு குறைவாக வர்த்தகமானது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச ம்பர் 17-ம் தேதி) ஒரு பிட்காயின் மதிப்பு 19,666 என்ற உச்சபட்ச அளவை எட்டியது. ஆனால் கடந்த சில நாட்களாக பிட்காயின் மதிப்பு 36 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. குறைந்தபட்சமாக இந்த வாரத்தில் பிட்காயின் மதிப்பு 12,560 டாலரை எட்டியது. இந்த ஆண்டில் மட்டும் பிட்காயின் மதிப்பு 13 முறை உயர்ந்திருக்கிறது.

பணமில்லாமல் காசோலை திரும்பினால்...

வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தால், அதனை அளித்தவருக்கு அபராதம் விதிப்பதற்கும் சிறை தண்டனை விதிப்பதற்கும் வழி வகை செய்யும் காசோலை உள்ளிட்ட பணப்பரிமாற்ற ஆவணங்கள் சட்டத்திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத் தில் கடந்த 1881-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தப் பணப்பரிமாற்ற ஆவணங்கள் சட்டம் தற்போது வரை நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் கார்களின் விலை உயர்கிறது

ஹூண்டாய் நிறுவனம் தனது அனைத்து மாடல் கார்களின் விலைகளையும் அடுத்த ஆண்டு முதல் உயர்த்த உள்ளது. கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் பல்வேறு மாடல் கார்களை விற்பனைக்கு விட்டு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்ற நிறுவனம் ஆகும். இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம் தனது அனைத்து மாடல் கார்களின் விலைகளையும் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி முதல் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. விலை அதிகரிப்பு குறித்து ஹூண்டாய் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகரித்து வரும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வினை கருத்தில் கொண்டு அதிகபட்சமாக 2 சதவீதம் வரை விலை உயர்த்துவதாக குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து