முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பென்னாகரம் பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி பக்தரகள் வழிபாடு

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      தர்மபுரி
Image Unavailable

பென்னாகரம் பி.அக்ரஹாரம் முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி பக்தரகள் வழிபாடு நடத்தினர். திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவிழா

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பென்னாகரம் பி.அக்ரஹாரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று திருவிழா அங்கு நடந்து வருகிறது.பென்னாகரம் சுற்று வட்டார பகுதிகள் மட்டுமின்றி, தருமபுரி, அரூர் பொம்மிடி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த வருகின்றனர். விரதம் இருந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

ஆயிரக்கணக்கில் ஆடு, கோழிகள் முனியப்பனுக்கு பலியிடப்பட்டது. கோயில் திருவிழாவையொட்டி நூற்றுக்கணக்கான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் தவிர்க்க பென்னாகரம் போலீசார் பொதுமக்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து