2018-ம் ஆண்டிலும் அணுஆயுத கொள்கையில் மாற்றமில்லை: வடகொரியா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017      உலகம்
KIM 2017 12 31

பியாங்கியாங்: ‘‘2018 புத்தாண்டிலும் அணுஆயுத மேம்பாட்டுக் கொள்கை யில் எந்த மாற்றமும் இருக்காது’’ என்று வடகொரியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவே ஏவுகணை, அணுஆயுத சோதனை நடத்தப்பட்டது என்று வடகொரியா கூறி வருகிறது. மேலும், கடந்த மாதம் 29-ம் தேதி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையும், அணு ஆயுத சோதனையையும் நடத்தியது. அதன்பின், ‘வடகொரியா அணுஆயுத நாடு’ என்று அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக அறிவித்தார்.

ஐ.நா.வின் பல்வேறு பொருளாதார தடைகள், சர்வதேச நாடுகளின் நிர்பந்தங்கள் இருந்தாலும், 2018-ம் ஆண்டிலும் அணுஆயுத கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று கொரிய மத்திய செய்தி ஏஜென்சி தகவல் வெளியிட்டுள்ளது.


அதில் கூறியிருப்பதாவது:
வடகொரியாவின் சுதந்திரம், நீதியை எந்த நாட்டு சக்தியும் தடுத்துவிட முடியாது. நாட்டின் சுய பாதுகாப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் அணுசக்தி திட்டங்கள் மேம்படுத்தப்படும். வடகொரியா பொறுப்புள்ள ஒரு அணுஆயுத நாடாக தொடர்ந்து இருக்கும். வரும் 2018-ம் ஆண்டிலும் அணுஆயுத மேம்பாடு தொடரும். அந்தக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு வடகொரியா செய்தி ஏஜென்சி கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து