தென் ஆப்பிரிக்காவின் சவாலை சந்திக்க தயார் - விராட் கோலி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2017      விளையாட்டு
virat kohli 2017 12 31

கேப்டவுன் : இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் 6 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 5ம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா சென்ற பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோலி அங்கு முதல் முறையாக அளித்த பேட்டியில்,

தென் ஆப்பிரிக்காவில் விளையாடியதில் 2010-11 தொடர்தான் நல்ல முடிவாக இருந்தது. அப்போது டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதுவரை தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் தொடரை வென்றது இல்லை. நாங்கள் தற்போது அந்த அணியின் சவாலை எதிர்கொள்ள எல்லா வகையிலும் தயாராக இருக்கிறோம். சமீப காலமாகவே எங்களது ஆட்டத்திறன் மேம்பட்டு இருக்கிறது. இந்திய அணி சம்பவத்துடன் இருக்கிறது. வேகப்பந்து வீச்சு நன்றாக உள்ளது. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துவதற்காகவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். எங்களால் அந்த அணியை கண்டிப்பாக தோற்கடிக்க முடியும்.

கடந்த கால வரலாற்றை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்துவதற்குரிய நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளது. டெஸ்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஆதிக்கம் செலுத்துவோம் எங்களது திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவோம். இந்தியாவை காட்டிலும் தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்கள் மாறுபட்டது. இங்குள்ள பிட்ச் தன்மையை நாங்கள் அறிந்த வைத்துள்ளோம். எந்த மாயமும் இல்லை. நாங்கள் எதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.


இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடயேயான போட்டி எப்போதுமே கோலி - டிவில்லியர்ஸ் இடையேயான மோதலாக பார்க்கப்படுவது ஏன் என்று தெரியவில்லை. அவரை அவுட் செய்தால் மட்டுமே இந்தியாவோ, என்னை ஆட்டம் இழக்க செய்வதால் மட்டுமே தென் ஆப்பிரிக்காவோ தொடரை வெல்லும் வாய்ப்பு கிடைப்பது இல்லை. இவ்வாறு விராட் கோலி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து