முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டவுனில் விராட் - அனுஷ்கா ஷாப்பிங்

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

கோலியும், அனுஷ்காவும் கேப் டவுன் நகரில் ஷாப்பிங் செய்வது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர்கள் ஷாப்பிங் செய்யும் கடையில் 50 சதவிகிதம் ஆஃபர் என்ற அறிவிப்பு உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பல்வேறு கமென்ட்களை பதிவு செய்து வருகின்றனர். அவற்றுள் சில சுவாரஸ்யமான கமென்ட்கள்...

“அனுஷ்கா: பேபி, ஷாப்பிங் போகலாமா?
விராட்: போகலாம். அதற்கு சரியான இடம் எனக்கு தெரியும்” என்பதாக ஒரு கமென்ட்.

“விராட் கோலியின் ஆண்டு வருமானம் 7.1 மில்லியன் டாலர். அனுஷ்காவின் ஆண்டு வருமானம் 3.8 மில்லியன் டாலர். இருந்தும் அவர்கள் 50% ஆஃபர் உள்ள இடத்திற்கே ஷாப்பிங் செல்கிறார்கள்” என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

“கணவர் விராட் கோலியாக இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு 50% ஆஃபர் என்பது ஈர்ப்பையே கொடுக்கும்” என்று ஒரு ரசிகை தெரிவித்துள்ளார்.

“எவ்வளவு வருமானம் வந்தாலும், இந்தியர்கள் தள்ளுபடி விலையிலே ஷாப்பிங் செய்ய விரும்புவர்” என்று ஒருவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து