ஈரானில் ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கத் தடை

டெஹ்ரான், ஈரானில் ஆராம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆரம்பக் கல்வியில் பிற மொழிகளை உட்புகுத்துவது கலாச்சார ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் என்று இஸ்லாமிய மத தலைவர்கள் எச்சரிக்கை விடுத்ததையடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடை குறித்து ஈரான் கல்வி அதிகாரி கூறியபோது, ''அரசு மற்றும் தனியார் ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிப்பது விதிக்களுக்கு முரணானதாக பார்க்கப்படுகிறது'' என்றார்.
ஈரானைப் பொறுத்தவரை 12 வயதைக் கடந்த மாணவர்களுக்குதான் பள்ளிகளில் ஆங்கில மொழிப் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக 2016-ம் ஆண்டில், ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா கொமேனி பிற கலாச்சார ஆக்கிரமிப்புக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து அவர் கூறியபோது, ''இந்த எதிர்ப்பு பிற மொழியை கற்று கொள்வதற்கானது இல்லை. ஆனால் ஈரானின் சிறுவர், இளைஞர்களிடையே பிற கலாச்சார ஊக்குவிப்பதற்கானது'' என்றார்.