முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பதவி விலகும் முடிவை கைவிட்டது ஏன்? ஷீலா தீட்சித் விளக்கம்

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லி முதல்வர் பதவியிலிருந்து கடந்த 2012ஆம் ஆண்டிலேயே விலக விரும்பியதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித் தெரிவித்தார்.

சிட்டிசன் தில்லி மை டைம்ஸ், மை லைஃப் என்ற தலைப்பில் ஷீலா தீட்சித் தனது சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதற்கான நேரம் வந்துவிட்டதாக கடந்த 2012ஆம் ஆண்டில் நான் கருதினேன். எனது குடும்பத்தினரும், உடல்நலத்தை சுட்டிக்காட்டி, இதையே வலியுறுத்தினர். இதையடுத்து, டெல்லி முதல்வர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்வது ஏறத்தாழ கடந்த 2012ஆம் ஆண்டில் உறுதியாகிவிட்டது.

இந்நிலையில், டெல்லியில்  மருத்துவ மாணவி நிர்பயா சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வர் பதவியிலிருந்து விலகும் முடிவை நான் கைவிட்டேன். அந்தப் பதவியில் தொடர்ந்து நீடித்தேன். ஆனால், அப்படி பதவி விலகினால், போர்க் களத்தில் இருந்து தப்பியோடுவது போலாகும் என்று கருதினேன். இதனால் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று அதில் ஷீலா தீட்சித் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்தது முதல், டெல்லியில் தனது ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த மாற்றங்கள், 2013ஆம் ஆண்டு டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட தோல்வி உள்ளிட்ட அனைத்தையும் அந்தப் புத்தகத்தில் ஷீலா தீட்சித் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து