முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் முனைவோர்கள் வங்கி கடன் பெறுவதற்கான பயிற்சி முகாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், மகளிர் திட்டம் மற்றும் ஜெயராம் கல்வி அறக்கட்டளை சார்பில் சுயதொழில் முனைவோருக்கான நடைமுறைகள் மற்றும் வங்கி கடன் பெறுவதற்கான பயிற்சி முகாம்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கலெக்டர் சந்தீப் நந்தூரி  கலந்து கொண்டு, பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார்கள்.இம்முகாமில், கலெக்டர்  பேசியதாவது :-

 பயிற்சி முகாம் 

 தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் (மகளிர் திட்டம்) மூலம் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஊரக பகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நகர்புற பகுதியில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் என்ற பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்க திட்டங்களின் மூலம் வறுமைக்கோட்டு பட்டியலில் இடம் பெற்றுள்ள குடும்பங்களை சார்ந்த நபர்களுக்கு நிலைத்த, நீட்டித்த வாழ்வாதாரத்தை பெருக்கும் நோக்கத்துடன் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழிற் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2016-17ம் நிதியாண்டில் 734 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சிகள் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. ஜெயராம் கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு, நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்ட 175 நபர்களுக்கு அடிப்படை தையல் பயிற்சிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. ஊராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் சுயமாக தொழில் செய்திட திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. நகர்புறங்களில் ஜவுளிக்கடைகள், மால்கள், மருத்துவ மனைகiள், பியூட்டி பார்லர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்புகள் இருந்தாலும், தகுதியான நபர்கள் இல்லாத நிலை உள்ளது. இதுபோன்ற தனித்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மூலம் சுயமாக தொழில் தொடங்கவும், வேலைவாய்ப்புகளை பெறவும், மத்திய, மாநில அரசுகளின் மூலம் உள்ள கடன் மானிய திட்டங்களையும் அறிந்து கொள்ள முடியும். கடன் பெற வங்கிகளின் நடைமுறைகளை அறிந்து கொள்ளவும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது தங்களின் பகுதிக்கு தேவையான தொழிலை கண்டறிதல், உள்ளிட்ட விவரங்களும் இப்பயிற்சியின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். தாட்கோ, மாவட்ட தொழில் மையம் சார்பிலும் பல்வேறு கடனுதவி மானிய திட்டங்கள் உள்ளது. இப்பயிற்சியில், கூறப்படும் தகவல்களை நன்றாக தெரிந்து கொண்டு, திறனை மேம்படுத்தி, தொழில் தொடங்கியும், வேலைவாய்ப்புகளை பெற்றும் வாழ்வாதாரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டுமென பேசினார்.

இப்பயிற்சி முகாமில், தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் த.கெட்ஸி லீமா அமலினி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வி.கே.வெங்கடேஷ்வரன், மாவட்ட முன்னோடி வங்கி  மேலாளர் என்.கஜேந்திரன், ஜெய்ராம் கல்வி அறக்கட்டளை முதன்மை நிர்வாக அலுவலர் ஜே.பாலகிருஷ்ணன் மற்றும் மகளிர் திட்டம், உதவி திட்ட அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து