இந்திய பங்குசந்தை கடும் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி இழப்பு

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      இந்தியா
stock 2018 02 01

மும்பை: மும்பை பங்குச் சந்தையில் நேற்று காலை வர்த்தக நேர துவக்கத்தில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 926.27 புள்ளிகள் குறைந்து 33,830.89 புள்ளிகளாக உள்ளன. அதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 281.75 புள்ளிகள் குறைந்து 10,384.80 புள்ளிகளாக உள்ளன.

மும்பை தேசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சில விநாடிகளில் ரூ.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதால் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக வாரத்தின் இரண்டாவது நாளான நேற்று பங்குசந்தை கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் தொடங்கிய உடனே 1000 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் தொடங்கியவுடன் 300 புள்ளிகள் சரிந்தது.

அதேசமயத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் குறைந்து 64.36 ரூபாயாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து