தேனியில் அதிமுக உறுப்பினர் புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      தேனி
admk   embership 8 2 18

  தேனி-  தேனியில் அதிமுக உறுப்பினர் அட்டை புதுப்பித்தல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நேற்று  முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் முதல் மூன்று வார்டுகளிலும், நேற்று 4, 5, 8 வார்டுகளிலும் இம்முகாம் நடைபெற்றது. இம்முகாமில் நகர செயலாளர் முருகேசன் தலைமையில் பொருளாளர் வீரமணி முன்னிலையில் கூட்டுறவு சங்க தலைவர் ரெங்கநாதன், டெய்லர்முருகேசன், தங்கராமன், ஐயப்பன், சுந்தரபாண்டியன், கவியரசன், ராமுத்தாய் உள்ளிட்ட நிர்வாகிகள் பழைய உறுப்பினர்களின் அட்டையை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இம்முகாம் குறித்து அந்தந்த வார்டு செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் அப்பகுதியில் உள்ள பழைய உறுப்பினர்கள் அட்டையை புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர்களை கண்டறிந்து சேர்க்கவும் வீடு வீடாக சென்று பணியாற்றி வருகின்றனர். இம்முகாமில் ஏராளமானோர் புதிய உறுப்பினர்களாக சேர விருப்பம் தெரிவித்து தங்களை இணைத்து கொண்டுள்ளனர். 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து