பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவு

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      வர்த்தகம்
stock 2018 02 01

பங்குச்சந்தைகளில் நீண்டகால முதலீடுகளுக்கு 10 சதவீத முதலீட்டு ஆதாய வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு காரணமாக பட்ஜெட் தாக்கலான பிப்ரவரி 1ம் தேதி முதல் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.  இதனால் முதலீட்டாளர்களுக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 2.72 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டது. பங்குச்சந்தைகள் நேற்று முன்தினம் சற்று உயர்ந்து சரிவில் இருந்து மீண்டு வந்தன.

இந்நிலையில், அமெரிக்காவில் வங்கி வட்டி விகிதம் உயர்த்தப்படக்கூடும் என்ற தகவல் காரணமாக அந்நாட்டு பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. இதன் தொடர்ச்சியாக ஆசிய பங்குச்சந்தைகளும் நேற்று 4.24 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 34,000 புள்ளிகளுக்கும் கீழே சரிந்தது. நேற்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் 563 புள்ளிகள் சரிந்து 33,849 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து