முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.கவுக்கு மக்கள் வாக்களித்தது முத்தலாக் சட்டம் கொண்டு வர அல்ல: பிரவீண் தொகாடியா சாடல்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

அவுரங்காபாத், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தது அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காகத்தான், முத்தலாக் தடை சட்டம் கொண்டு வர அல்ல என்று விஸ்வ இந்து பரிசத் சர்வதேச தலைவர் பிரவீண் தொகாடியா கடுமையாக மத்திய அரசை சாடியுள்ளார்.

மகராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் நகருக்கு 2நாட்கள் பயணமாக சென்றுள்ள விஸ்வ இந்து பரிசத் சர்வதேச செயல் தலைவர் பிரவீண் தொகாடியா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிக்கு வாக்களித்தது அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதற்காகத்தான். முத்தால் தடைச் சட்டம் இயற்றுவதற்காக பா.ஜ.க.வை ஆட்சியில் அமர வைக்கவில்லை.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான சட்டத்தை மத்திய அரசு விரைவில் இயற்ற வேண்டும். கட்டிடத்தை உடனடியாக கட்ட வேண்டும். ராமர் கோயில் கட்டுவதற்காக தனியாக சட்டத்தை இயற்ற வேண்டும்.

நாங்கள் நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கிறோம். ஆனால், கோயில் கட்டப்படா விட்டால், புதிதாக ஒரு சட்டம் இயற்றி ராமர் கோயில் கட்டும் பணியை மத்திய அரசு தொடங்க வேண்டும் கோயில் அருகே எந்த மசூதியும் இருக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து