முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையில் குரூப் 4 தேர்வு: கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      திருநெல்வேலி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்   நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 4   அடங்கிய பல்வேறு  பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் திருநெல்வேலி மாவட்டத்தில் 16 தேர்வு மையங்களில் 322 கல்வி நிலையங்களில்  நடைபெற்று வருகிறது.

குடிமைப்பணிகள் தேர்வு - 4 

மேற்படி தேர்வினை 1,03,636 நபர்களில் 88,217 நபர்கள் தேர்வு எழுதிகின்றனர். இதில் 15,419 நபர்கள் தேர்வு எழுதவில்லை 85 சதவீத நபர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். இத்தேர்வினை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 23 பறக்கும்படை அலுவலர்களும், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் நிலையில் 63 சுற்றுக்குழு அலுவலர்களும், உதவியாளர் நிலையில் 371 ஆய்வுப்பணி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் தேர்வினை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று தேர்வு நடைபெறும் மையங்களில் தடைபடாத மின்சாரம் வழங்கவும், குடிநீர், கழிப்பறை வசதி மற்றும் தேர்வு மையங்களுக்கு போதிய பேருந்து வசதிகளும், செய்ய மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெறும் கல்வி நிலையங்களுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் தேர்வுத்தாள் துப்பாக்கி ஏந்திய காவர்கள் மூலம் எடுத்து செல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என கலெக்டர் சந்தீப் நந்தூரி,  தெரிவித்தார். முன்னதாக பாளையங்கோட்டை தூய யோவன் மேல்நிலைப்பள்ளி, தூய யோவன் கல்லூரி மற்றும் வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி உள்ள தேர்வு மையங்களை கலெக்டர்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து