முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் காதலர் தினம் ஆதரவும் - எதிர்ப்பும்

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      மதுரை
Image Unavailable

மதுரை, - மதுரையில் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதனை சில அமைப்புகள் ஆதரவும், சில அமைப்புகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் ஆங்கில வருடத்தின் பிப்ரவரி மாதம் 14 ம் தேதியை காதலர்கள் தினமாக கொண்டாடப்பட்டு  வருகிறார்கள். இந்த காதலர் தினத்தை சிலர் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் வருகிறார்கள். மதுரையில் நேற்று 14 - ம் தேதி காதலர்கள் பல்வேறு இடங்களில் காதலர் தினத்தை கொண்டாடினார்கள். பூங்காக்கள், கோவில்கள், தியேடர்க்களுக்கு காதலர்கள் ஜோடியாக சென்று நேற்று ஜாலியாக இருந்தனர். சில காதலர்கள் ரோஜா பூக்களை அன்பு பரிசாக கொடுத்து மகிழ்ந்தனர். மதுரையில் உள்ள ராஜாஜி பூங்கா, வண்டியூர் கண்மாய் பூங்கா ஆகிய இடங்களில் காதலர்கள் ஒன்றாக சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்து காதலர் தினத்தை கொண்டாடினார்கள். ஒருவருக்கொருவர் பரிசுப்பொருட்களை கொடுத்து அன்பை வெளிபடுத்தி மகிழ்ந்தனர்.


மதுரையில் ஆதித்தமிழர் பேரவையினர் இந்த காதலர் தினத்திற்கு ஆதரவு தெரிவித்து தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். காதலர்களை பாதுகாப்பது நமது கடமையாகும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சாதி மறுப்பு முதல் திருமணம் செய்த மதுரை வீரன் தினத்தில் காதலர்களை ஆதரிப்போம் என்று அவர்கள் தெரிவித்து மதுரை நகர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளார்கள். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பூங்காகளுக்கு சென்று அங்கு வந்த காதல் ஜோடிகளுக்கு இனிப்பு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
தமிழ் புலிகள் கட்சி சார்பில் காதலர்களுக்கு இனிப்புகள் வழங்கி நேற்று வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. சாதி மறுப்பு திருமணம் செய்யும் காதலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சாதியற்றோர் சான்றிதழ் வழங்கவேண்டும். இட ஒதுக்கீடு மற்றும் அரசு வேலை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து மதுரை மாவட்ட தமிழ்புலிகள் கட்சியினர் காதலர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


காதலர் தினத்திற்கு  சில அமைப்புகள் தங்களது எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. இந்து இளைஞர் பேரவையினர்  காதல் எண்ணும் மண் குதிரை நம்பி வாழ்க்கை எண்ணும் ஆற்றை கடக்காதே என்பதே காதலர்களுக்கு வலியுறுத்தும் வகையில் மண் குதிரை பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைத்து போராட்டம் நடத்தினர். காதலர் தினத்தை காமுகர்கள் கொண்டாடி வருகின்றனர். பெண்களை அன்னிய கலாசாரத்திற்கு அடிமையாக்கும் காதலர் தினத்தை கொண்டாட அனுமதிக்க கூடாது. காதல் என்ற பெயரில் பொதுமக்கள் முகம் சுளிக்கின்ற செயல்களில் ஈடுபடுவதை யாராலும் ஏற்றுகொள்ள முடியாது என்று இந்து இளைஞர் பேரவையினர் காதலர் தினத்திற்கு தங்களது கடும் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து