இளைஞரணி மற்றும் மாணவரணி கலந்தாய்வுக் கூட்டம்

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2018      காஞ்சிபுரம்
kanchi

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றிய, பேரூர் மற்றும் சாலவாக்கம் ஒன்றிய திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

அன்னதானம்

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், சோழனூர் மா.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 இந்த ஆய்வுக் கூட்டத்தில் மார்ச் 1 ல் தளபதி பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாள் கொண்டாடுதல், அன்றைய தினம் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, ஊராட்சி கிளை கழகங்களில் கல்வெட்டுக்கள் திறந்து கழகக் கொடியேற்றுதல், இளைஞரணி மற்றும் மாணவரணியில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், வாக்காளர் இறுதிப்பட்டியலை சரிபார்த்தல், வாக்குச்சாவடி வாரியாக தேர்தல் பணிக்குழு அமைப்பது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இளைஞரணி மற்றும் மாணவரணி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல்மாலிக், துணை அமைப்பாளர் பெ.மணி, து.தேவேந்திரன், ஆனந்தன், பொன்சங்கரன், சண்முகம், ஸ்ரீபன்ராஜ், மாணவரணி அமைப்பாளர் அபுசாலி, துணை அமைப்பாளர் சோபன்குமார், மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜன், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து