முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிப்பதில்லை: ராணுவ தளபதி விளக்கம்

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

முனிச் நகர், பாகிஸ்தான் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதில்லை. எனவே, அமெரிக்கா எங்கள் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு ராணுவ தளபதி கமர் ஜாவித் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

ஆப்கனில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியதாக பாகிஸ்தான் மீது கூறப்படும் குற்றச்சாட்டை அமெரிக்க உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எப்போதுமே பாகிஸ்தான் புகலிடம் அளித்தது கிடையாது.

பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டுவதற்கு பதிலாக, உள்நாட்டுப் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆப்கனில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தோல்வியடைந்ததற்கு என்ன காரணம் என்பதை அமெரிக்க தலைமை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

ஆப்கன் மண்ணில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை தேடி கண்டுபிடித்து அழிக்கும் பணியை பாகிஸ்தான் நிறைவாக மேற்கொண்டது. ஆப்கனைச் சேர்ந்த 27 லட்சம் அகதிகளுக்கு பாகிஸ்தான் தற்போது அடைக்கலம் அளித்து வருகிறது.

பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து முழு ஒத்துழைப்புடன் செயல்படுவது மிகவும் அவசியம் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து