முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: சேலம் மாநகராட்சியில் சாலை பணிகள் துவக்க விழா, பூமி பூஜை

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

அதிமுக அரசு அம்மா வழியில் மக்கள் போற்றும் அரசாக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என சேலம் மாநகராட்சியில் ரூ.94.39 கோடிக்கு 362 சாலை பணிகள் துவக்க விழாவில் பூமி பூஜை செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். .சேலம் பள்ளபட்டி மெயின் ரோட்டில் நடைப்பெற்ற விழாவிற்கு சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி ரா.பாஜி பாகரே தலைமை தாங்கினார் சேலம் பாராளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் சேலம் மேற்கு ஜி.வெங்கடாஜலம், மேட்டூர் செ.செம்மலை, ஓமலூர் வெற்றிவேல், சேலம் தெற்கு ஏ.பி.சக்திவேல், ஏற்காடு சித்ரா உள்பட பலர் முன்னிலை வகித்தனர். புதிய திட்டப் பணிகள் துவங்கி வைத்து முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- சேலம் மாநகரம் வளர்ந்து வரும் மாநகராட்சி இங்குள்ள மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அதிமுக அம்மா அரசு பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம், மின்சார வயர்களை பூமிக்கு அடியில் கேபிள்களாக பதிக்கும் திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தது. இந்த பணிகள் முடிவுற்றதும் மறு சீரமைப்பு பணிகள், சாலைகள் விரிவாக்கம், ஆகியவற்றிற்கு ரூ.148 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக குடி நீர் குழாய்கள் பதிப்பு, மின் கேபிள்கள் பதிப்பு ஆகிய பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை சீரமைக்க ரூ.94 .39 கோடி நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதில் 362 சாலைகள் புதுபிக்கப்பட உள்ளது. ஏற்கனவே 60 டிவிசன்களில் சாலை மற்றும் பல்வேறு பணிகளுக்காக ரூ 142 கோடி வழங்கி பணிகள் நிறை பெற்று விட்டது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் சேலம் ஸ்மார்ட் சிட்டியாக கொண்டு வரப்பட்டது. அதற்கான பணிகள் முழு வீச்சில் ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை , பழைய பஸ் ஸ்டாண்டில் நேரு கலையரங்கம் , வஉசி மார்கெட், பு துப்பித்தல் திருமணிமுத்தாறு அபிவிருத்திட்ட பணிகள் உள்ளிட்ட 10 பணிகளுக்கு ரூ 19 08. கோடியே 60 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கி புதுப்பிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது இந்த பணிகள் முடிந்ததும் மாநகர மக்களுக்கு அடிப்படை தேவைகள் பூர்த்தியடையும் சேலம் மாநகராட்சிக்கு ஏற்கனவே ரூ.13 கோடி நிதியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. 7.03.2017 அன்று நடந்த விழாவிர் ரூ,466 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக வாகனங்கள், குப்படை தொட்டிகள் வழங்கப்பட்டது. மக்கள் சுகாதாரமாக வாழ ரூ.3கோடியே 33 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 6 சுகாதார வளாகம் திறக்கப்பட்டுள்ளது. இதே போல் ரூ.1.93 கோடியில் பசுமை வெளி பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளது.ரூ.90 லட்சம் செலவில் காய்கறி கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம், அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் விடுதி, ரூ.50 வட்சம் செலவில் சாலைகள் திரிவோர் தங்க 2 விடுதிகளும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது சேலம் மாநகர் முழுவதும் போக்குவரத்து தடையின்றி நடை பெற தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மேம்பாலங்கள் கேட்டோம். அவரும் 5 ரோடு, மாமாங்கம். லீ பஜார், முள்ளு வாடி கேட் இருபுறமும் மேம்பாலங்கள், மணல்மேடு மேம்பாலங்கள் ஆகிய இடங்களில் பாலங்கள் அமைக்க நிதி ஒதுக்கினார் தற்போது சேலம் திருவாக்கவுண்டனூரில் பாலம் திறக்கப்பட்டுவிட்டது. விரைவில் ஏ.வி.ஆர். ரவுண்டானா பாலம் திறக்கப்படும். . சாரதா காலேஜ் ரோடு, 4 ரோடு முதல் புதிய பஸ் நிலையம், 5 ரோடு வரை இரண்டடுக்கு பாலப் பணிகள் முமு வீச்சில் நடைபெற்று வருகிறது சேலம் மாநகருக்கு கனரக வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்காக புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க மத்திய தரை வழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வை்த்தோம். அதன்பேரில் ராசிபுரம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு ரோட்டில் இருந்து ஒமலூர் வரை புறவழிசாலை அமைக்க உத்தவிட்டு ஆரம்பகட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டு வருறகிது இந்த பணிகள் முடிந்தால் மாநகரில் போக்குவரத்து நெரிசலே இருக்காது.மேலும் சேலம் மாநகருக்கு ஏர்போர்ட் மாதிரி பஸ்போர்ட் அமைய உள்ளது. சேலம் அரபி கல்லூரி பின்புறம் 70 ஏக்கள் அனைத்து நவீன வசதிகளுடன் பஸ்போர்ட் அமைக்க பணிகள் நடைப்பெற்று வருகிறது.மத்திய அரசிடம் தமிழகம் முழவதும் சாலைகளை விரிவு படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம்-திருப்பத்தூர், ஆத்தூ-பெரம்பலூர், திருச்செங்கோடு-ஓமலூர், நாமக்கல் முதல் திருச்சி வரையிலும் 4 வழிச்சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படஉள்ளது. . . சேலம் அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு விரைவில் துவங்கப்பட உள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 2 கைகளையும் இழந்த திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த இளைஞருக்கு இறந்த ஒருவரின் 2 கைகளையும் இணைத்து வெற்றி கண்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து திட்டங்களையும் பொதுமக்களுக்காக செயல்படுத்தி வருகிறோம். இந்த அரசு அமைந்த போது 10 நாள் தாங்குமா, 1 மாதம் தாங்குமா என எதிர்கட்சிகள் ஜோசியர் போல் ஆருடம் கூறினார்கள் ஆனால் 1 வருடம் கடந்து மக்கள் போற்றும் சிறப்பான அரசாக செயல்பட்டு வருகிறது. மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் மத்திய அரசின் உதவியுடன் நலத்திட்டங்கள் செய்து வருகிறோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த விழாவில் தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கிகளின் தலைவர் இளங்கோவன், முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.செ்ல்வராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகராட்சி ஆணையாளர் சதீ];குமார் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து