முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் விமானத்தை தனியாக ஓட்டி பெண் விமானி சாதனை

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, இந்தியாவில் முதன்முறையாக போர் விமானத்தை தனியாக ஓட்டி விமானப்படை பெண் அதிகாரி அவனி சதுர்வேதி சாதனை படைத்துள்ளார்.

இந்திய விமானப்படையில் பெண்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு போர் விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பல கட்ட பயிற்சிக்கு பின் அவர்கள் குழுவாக தேர்வு செய்யப்பட்டு தனியாக விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள விமானப்படைத் தளத்தில் அவனி சதுர்வேதி, பாவனா காந்த், மோகனா சிங் ஆகிய மூன்று பெண் விமானிகளுக்கு போர் விமானத்தை தனியாக ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கப்ப்டடு வந்தது. மிக் -21 பைசன் விமானத்தை ஓட்டி இவர்கள் பயிற்சி எடுத்து வந்தனர்.

இவர்களில் அவனி சதுர்வேதி தனியாக போர் விமானத்தை வெற்றிகரமாக ஓட்டினார். இதன் மூலம் இந்தியாவில் போர் விமானத்தை தனியாக ஓட்டி சாதனை படைத்த முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஜாம்நகர் விமானபடை தளத்தில் மேலும் மூன்று பெண்களுக்கு அடுத்தகட்ட போர் விமானப்பயிற்சி விமானப்படை திட்டமிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து