முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசுத்தமாக உள்ள பழமைவாய்ந்த ஏரிகளை சுத்தப்படுத்தி வரும் சமூக ஆர்வலர்கள்

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2018
Image Unavailable

அசுத்தமாக உள்ள பழமைவாய்ந்த ஏரிகளை சுத்தப்படுத்தி வரும் சமூகஆர்வலர்கள் ஒசூரில் பழமை வாய்ந்த இராமநாயக்கன் ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயதாமரை செடிகள் உள்ளிட்ட அசுத்தங்களை ஒசூர் சமூகஆர்வலர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒசூர் நகரின் வளர்ச்சிக்காகவும் நீர் ஆதாரத்தை பெருக்கிஇ. பொதுமக்களுக்கு நல்ல குடிநீரை வழங்கவும் அசுத்தமாக கிடந்த ஏரிகள் அனைத்தையும் ஒசூரிலுள்ள சமூகஆர்வலர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். இதில் முதற்கட்டமாக ஒசூர் தேர்பேட்டை ஏரியை சூழ்ந்திருந்து அசுத்தங்களையும் ஆகாயதாமரை செடிகளையும் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு சுத்தம் செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து தற்போது ஒசூர் நகரின் மையப்பகுதியில் உள்ள பழமைவாய்ந்த இராமநாயக்கன் ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் மழை காலங்களில் அதிக அளவு நல்ல நீர் சேமிக்க முடியும்இ நீராதாரத்தை பெருக்கி பொதுமக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்கும் இதற்கு ஒசூர் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து