முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நல தேசிய ஆணைய துணைத்தலைவர் ஆய்வு

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வெள்ளம்புத்தூர் கிராமத்தில் 22.02.2018 அன்று மர்ம நபர்களால் ஏற்படுத்தப்பட்ட தாக்குதல் குறித்து, புதுதில்லி ஆதிதிராவிடர் நல தேசிய ஆணையத்தின் துணைத்தலைவர்  எல்.முருகன்   நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு

புதுதில்லி, ஆதிதிராவிடர் நல தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர்  எல்.முருகன்  இன்று 26.02.2018 திங்கட்கிழமை விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வெள்ளம்புத்தூர் கிராமத்தில் 22.02.2018 அன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் மர்ம நபர்களால் ஏற்படுத்தப்பட்ட தாக்குதலில் செல்வன்.சமயன் தபெ.ஏழுமலை (வயது-8) என்பவர் இறந்தது குறித்தும், மேலும் ஆராயி கபெ.ஏழுமலை (வயது-45) மற்றும் செல்வி.தனம் தபெ.ஏழுமலை (வயது-15) ஆகியோர்கள் பலத்த படுகாயங்களுடன் படுக்கையில் இருந்துள்ளது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.  ஆய்வின் போது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசின் மூலம் கிடைக்கக்கூடிய நிவாரண நிதிகளை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கும், விசாரணையை துரிதபடுத்தி சம்பவத்திற்கு காரணமான நபர்களை விரைவில் கைது செய்திடவும் மாவட்ட காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.ஆய்வின்போது சென்னை தேசிய ஆணைய இயக்குநர் எம்.மதியழகன், கலெக்டர் முனைவர்.இல.சுப்பிரமணியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, திருக்கோவிலூர் சார் ஆட்சியர் சாருஸ்ரீ, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் கே.சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆ.அருணாசலம், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் கு.பிரகாஷ்வேல், கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் வி.கோமதி, திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் டி.அசோக்குமார், கோட்டகுப்பம் காவல் துணை கண்காணிப்பாளர் சே.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து