முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப. சிதம்பரத்திடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ அதிகாரிகள் திட்டம்

வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு 5 நாட்கள் சி.பி.ஐ காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக, அவரின் தந்தையும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்தையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர சி.பி.ஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான சம்மனை ப.சிதம்பரத்துக்கு விரைவில் சி.பி.ஐ அதிகாரிகள் அனுப்புவார்கள் என்று சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெற கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தினார் என்றும், இதற்காக கார்த்தி சிதம்பரம் பங்குதாரராக இருக்கும் நிறுவனம் மூலம் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி ரூ.10 லட்சம் பெற்றதாக சி.பி.ஐ கடந்த ஆண்டு மே மாதம் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் குறிப்பிடத்தகுந்த ஆதாரம் கிடைத்ததையடுத்து லண்டனிலிருந்து சென்னை வந்த கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ சிறப்பு பொருளாதார பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், ஆங்கில நாளேடு ஒன்றுக்கு சி.பி.ஐ மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில்,

ஐ.என்.எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், ப.சிதம்பரம் நேரடியாக குற்றம் சாட்டப்படவில்லை. குற்றவாளியாகவும் சேர்க்கப்படவில்லை. ஆனால், இந்த பணப்பரிமாற்றம் அனைத்தும் அவரின் பதவிக்காலத்தில் நடந்துள்ளது. மேலும், அவர் நிதி அமைச்சராக இருந்த காலத்தில்தான் அனுமதியும் தரப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திராணி முகர்ஜியும், பீட்டர் முகர்ஜியும் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆதலால், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதில் ப.சிதம்பரத்தின் பங்கு என்ன என்பதை விசாரிக்க இருக்கிறோம். ஆதலால், இந்த வழக்கில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பி, சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து