எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் 8வது தேசிய மின் மற்றும் மின்னியல் கருத்தரங்கு கினிஸ்டா-2018 கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். கருத்தரங்கிற்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும செயலாளர் டி.ஜெ.ஆறுமுகம், துணை தலைவர் டி.ஜெ.தேசமுத்து. இயக்குனர்கள் டாக்டர் பழனி, விஜயகுமார், கபிலன், தினேஷ், தமிழரசு, நிர்வாக அலுவலர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பழனி வரவேற்றார். இந்த கருத்தரங்கின் துவக்க விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆர்கா எச்.ஆர் தொழில்நுட்ப நிறுவன தலைமை செயல் அலுவலர் டாக்டர் ராஜன் பாபு, சென்னை அக்வாதெர்ம் பொறியியில் நிறுவன முதன்மை மேலாளர் கே.பிரபாகர் திருவேங்கடம் ஆகியோர் கலந்துக் கொண்டு மின் மற்றும் மின்னியல் துறையில் தற்காலத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் இந்த துறை சார்ந்த எதிர்பார்ப்புகள் குறித்தும் விளக்க உரையாற்றினர்.
ஆராய்ச்சி மாதிரிகள்
இந்த கருத்தரங்கில் 30 கல்லூரிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நிலையில் மாணவர்களின் 120 ஆராய்ச்சி கட்டுரைகளில் 40 கட்டுரைகள் ஏற்கப்பட்டு அந்த ஆராய்ச்சி கட்டுரைகளின் தொகுப்பை நிகழ்வின் போது டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் வெளியிட ஆர்கா எச்.ஆர் தொழில்நுட்ப நிறுவன தலைமை செயல் அலுவலர் டாக்டர் ராஜன் பாபு, சென்னை அக்வாதெர்ம் பொறியியில் நிறுவன முதன்மை மேலாளர் கே.பிரபாகர் திருவேங்கடம் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து கருத்தரங்கில் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு விதமாக போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் மாணவர்களின் ஆராய்ச்சி மாதிரிகள் கண்காட்சியில் இடம்பெற்று அவைகளை புதுவாயல், ஆரணி, கவரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்களை பார்வையிட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வெஸ்டர்ன் தாம்சன் நிறுவன மனித வள அதிகாரி பி.மோகந் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசளித்தார். கருத்தரங்கினை டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரி மின் மற்றும் மின்னியல் துறை தலைவர் எம்.ஷண்முகசங்கரி உள்ளிட்ட துறை ஆசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


