முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேட்டவலத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா விவசாயிகள் 700 பேருக்கு தென்னங்கன்று அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2018      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 70வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு நகர கழக செயலாளர் கே.செல்வமணி தலைமை தாங்கினார்.

பிறந்த நாள் விழா

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள்நகர்.கே.ராஜன் முன்னிலை வகித்தார். கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு தமிழக இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.எஸ். ராமச்சந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து விவசாயிகள் 700 பேருக்கு தென்னை மரக்கன்றுகளும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் கடைவீதியிலுள்ள வாசவி திருமண மண்டபத்தில் 1000 பேருக்கு ஏழைஎளியோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சத்ய வி.சிவக்குமார், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் தஷ்ணாமூர்த்தி, நகர பொருளாளர் அப்துல்காதர், நகர துணை செயலாளர்கள் பவுன்குமார், வெண்ணிலாமுருகன், இணை செயலாளர் இந்திராசிதம்பரம், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், விஜியாசோழன், முன்னாள் கவுன்சிலர் காந்திரமேஷ், கமிட்டிஏழுமலை, நகர இளைஞர் பாசறை செயலாளர் ரஜினி, நகர இளைஞர் பாசறை தலைவர் அரிவழகன், விஜயகுமார், ஜெயக்குமார், சேவல்கணேஷ், வார்டு செயலாளர்கள் பிரகாஷ், பால.குணசேகரன், ரகு, சேகர், ரங்கநாதன், தமிழரசன், கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து