போர்சேவின் புது அவதாரம்

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      வர்த்தகம்
Porsche company car 2018 03 06

போர்சே கார் நிறுவனம் பறக்கும் கார் தயாரிப்பை மேம்படுத்தி வருகிறது. இந்த தகவலை அந்த நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரி டெட்லெவ் வோன் பிளாண்டன் கூறியுள்ளார். மேலும் பெரு நகரங்களின் பறக்கும் டாக்சி சேவையில் ஈடுபடுவதற்கான சாத்தியமும் உள்ளது என்றார்.

இது தொடர்பாக ஜெர்மனியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த கார் மூலம் மூன்றரை மணி நேரம் பறக்க வேண்டிய தூரத்தை மூன்றரை நிமிடங்களில் சென்றடையலாம். போக்குவரத்து சந்தை வழக்கமான கார்களுக்கான தேவையிலிருந்து டிரைவர் இல்லாத வாகன சந்தைக்கு மாறி வருகிறது. ஆனால் இந்த போட்டியிலிருந்து ஒதுங்கி போர்சே, பறக்கும் கார் தயாரிப்பு சந்தையில் இறங்கியுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து