ஐ.பி.எல் அணிகள் என்னை ஏலம் எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது - இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      விளையாட்டு
Joe Root 2018 3 6

லண்டன் : இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன ஜோ ரூட், ஐபில் ஏலத்தில் எந்த அணிகளும் ஏலம் எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

விரும்பவில்லை

ஐபிஎல் சீசன் 2018-க்கான வீரர்கள் ஏலம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் மார்க்யூ வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்த ஜோ ரூட்டை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. தொடரின் மத்தியில் இங்கிலாந்துக்கு சர்வதேச போட்டிகள் இருக்கும் என்பதால், அணி உரிமையாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமுமம் ஜோ ரூட் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை விரும்பவில்லை.


ஏமாற்றம் அளிக்கிறது

இந்நிலையில் புகழ்பெற்ற ஆடம்பரமான ஐபிஎல் தொடரில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது ஜோ ரூட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘ஐபிஎல் ஏலத்தில் ஏலம் போகாதது ஏமாற்றம் அளிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், இந்தியா சென்று ஏராளமான டி20 போட்டிகளில் விளையாட விரும்பினேன். அங்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. நான் அந்த நிலையில் இல்லை. என்னை பொறுத்தவரையில் எந்தவொரு ஐபிஎல் அணிக்கும் நான் சரியான நபராக இருக்கவில்லை. இது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், இதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து