மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

புதன்கிழமை, 7 மார்ச் 2018      இந்தியா
central gcenovernment(N)

புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு என ஒரு கோடிக்கும் மேலானவர்கள் பயன் பெறுவார்கள்.

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2 சதவீத அகவிலைப்படி உயர்வும், ஜூலை மாதம் முதல் ஒரு சதவீத அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டது. இதுவரை மொத்தம் 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது மேலும் 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.


இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியை கணக்கிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். இந்த அகவிலைப்படியை 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து