தொடர்ந்து பங்குச்சந்தை சரிவு

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      வர்த்தகம்
dollar rupee 0

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஆறாவது நாளாக சரிந்து முடிந்தன. வங்கி, நிதி மற்றும் பார்மா துறை பங்குகளின் சரிவு காரணமாக பங்குச்சந்தையில் தொடர் சரிவு ஏற்பட்டிருக்கிறது. டிரம்பின் பொருளாதார ஆலோசகர் கேரி கான் ராஜினாமா செய்ததை அடுத்து சர்வதேச பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்திய பங்குச்சந்தையிலும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் ஸ்டீல் மற்றும் அலுமினியத்துக்கு அதிக இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து பொருளாதார ஆலோசகர் ராஜினாமா செய்திருக்கிறார்.

அனைத்து சர்வதேச சந்தைகளும், அனைத்து துறைகளும் சரிவடைந்திருக்கின்றன. இந்திய பங்குச்சந்தைகளின் சரிவு எங்கு முடியும் என்பது குறித்து இப்போது கணிக்க முடியாது என சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். சென்செக்ஸ் 284 புள்ளிகள் சரிந்து 33033 புள்ளியில் முடிவடைந்தது. அதேபோல நிப்டி 95 புள்ளிகள் சரிவடைந்து 10154 புள்ளியில் முடிவடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து