ஜெட்லி மகள் நடத்தும் நிறுவனத்தில் சி.பி.ஐ சோதனையிடாதது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      இந்தியா
Rahul Gandhi 2017 06 03

புது டெல்லி, பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு விவகாரத்தில் தமது மகளை காப்பாற்றவே மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மவுனமாக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடர்பாக பல்வேறு நிறுவனங்களில் சோதனை நடத்தும் சி.பி.ஐ அதிகாரிகள், ஜெட்லியின் மகள் நடத்தும் நிறுவனத்தில் சோதனையிடாதது ஏன்? இவ்வாறு ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடர்பாக பல்வேறு நிறுவனங்களில் சோதனை நடத்தும் சி.பி.ஐ அதிகாரிகள், ஜெட்லியின் மகள் நடத்தும் நிறுவனத்தில் சோதனையிடாதது ஏன்?. தனது மகளைக் காப்பாற்றவே ஜெட்லி மவுனமாக இருக்கிறார்.  - ராகுல்

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,


பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,600 கோடி முறைகேடு நடந்தது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அவரது மவுனத்துக்கு என்ன காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட கீதாஞ்சலி நிறுவனத் தலைவர் மெஹுல் சோஸ்கிக்கும், ஜேட்லியின் மகள் நிர்வகிக்கும் நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. குறிப்பிட்ட இந்த முறைகேடு வெளியாவதற்கு ஒரு மாதத்துக்கு முன்புதான், ஜெட்லி மகளின் நிறுவனத்துக்கு கீதாஞ்சலி நிறுவனம் சார்பில் ஒரு பெரிய தொகை கைமாறியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் தனது மகளைக் காப்பாற்றவே ஜெட்லி மவுனமாக இருக்கிறார். பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடர்பாக பல்வேறு நிறுவனங்களில் சோதனை நடத்தும் சி.பி.ஐ அதிகாரிகள், ஜெட்லியின் மகள் நடத்தும் நிறுவனத்தில் சோதனையிடாதது ஏன்? இவ்வாறு ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.  இதனிடையே, தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், மும்பைக்கு நடைபயணமாக வந்திருக்கும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை பிரதமர் மோடியும், மகாராஷ்டிர முதல்வர் பட்னவீசும்  தங்களின் அகந்தைகளை விட்டுக்கொடுத்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து