ஏர்செல் வாடிக்கையாளர்களை கவர்ந்த நிறுவனம்

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      வர்த்தகம்
Aircel

ஏர்செல் நிறுவனத்தில் நாடு முழுவதும் 1.5 கோடி வாடிக்கையாளர்கள் இருந்தனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடிக்கும் மேல் இருக்கும். ஏர்செல் நிறுவனம் முடங்கும் நிலை வந்ததால், அதன் வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் ஏர்டெல், வோடோபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்கள் ஈடுபட்டன.

இதில், ஏர்செல் வாடிக்கையாளர்களை கவர்வதில் ஏர்டெல் மற்றும் வோடோபோன் இடையே கடும் போட்டி நிலவியது. ஏர்செல் அலுவலங்கள் முன்பு பல நாட்கள் ஸ்டால்கள் அமைத்து, அங்கு பிரச்னையுடன் வரும் வாடிக்கையாளர்களை உடனடியாக தங்களது நிறுவனத்திற்கு மாற்றினர். இந்தப் போட்டியில், இதுவரை ஏர்டெல் நிறுவனம்தான் முன்னிலையில் உள்ளது. ஏர்செல் வாடிக்கையாளர்களில் சுமார் 15 லட்சம் பேர் ஏர்டெல் நிறுவனத்திற்கு மாறியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, வோடோபோன் நிறுவனத்திற்கு 10 லட்சம் பேர் மாறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து