2019 தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்க்க சரத்பவாருடன் ராகுல் ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      அரசியல்
Rahul 2016 09 26

புது டெல்லி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை ஒன்று சேர்ந்து எதிர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் சந்தித்தார். அப்போது, 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு, பா.ஜ.க.வை எதிர்ப்பது குறித்து பேச்சவார்த்தை நடந்தது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறின.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர்தான் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவருமான சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர்களின் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்ச்சியில் 20 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அந்தச் சந்திப்பின் போதும் 2019 தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட ஓரணியில் திரள்வது குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு மறுநாள் சரத்பவாரை ராகுல் சந்தித்து பேசியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜியையும் ராகுல் காந்தி விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து