முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக முதல்வர் எடப்பாடி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தடைவிதிக்க வலியுறுத்தி மனுத்தாக்கல்

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, டி.டி.வி. தினகரன் அறிமுகப்படுத்திய கொடி அ.தி.மு.க கொடியை போன்றே உள்ளது என்பதால் அந்த கொடியை பயன்படுத்த தடை கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதிய கொடி அறிமுகம்

மதுரை மாவட்டம் மேலூரில் நேற்று முன்தினம் தினகரன் புதிதாக துவக்கியுள்ள இயக்கத்தின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்தார். பின்பு மேடையின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் ஜெயலலிதா படத்துடன் கூடிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிலையில் தினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக டெல்லி ஐகோரட்டில் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட தமிழக தேர்தல்களில் போட்டியிட ஏதுவாக தனக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில டி.டி.வி தினகரன் மனுதாக்கல் செய்திருந்தார். அதை ஏற்றுக்கொண்ட டெல்லி ஐகோரட் அவருக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இதை அடுத்து புதிய அமைப்பை தொடங்குவது என முடிவு செய்து அதன் படி மதுரையில் புதிய அமைப்பை அறிமுகப்படுத்தி அதற்கான கொடியை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், தினகரன் அறிமுக படுத்திய கொடியை எதிர்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை கோரப்பட்டுள்ளது.

குழப்பமடைய செய்யும்

தினகரன் அறிமுகப்படுத்தியுள்ள கொடி அ.தி.மு.க. கட்சிக் கொடியைப் போல் இருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரி கொடி இருப்பதால் அது  தொண்டர்களை குழப்பமடைய செய்யும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மனுவை சிவில் வழக்காக தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து