முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: மல்லிகார்ஜூன கார்கே நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மத்திய பா.ஜ.க அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது. இது தொடர்பாக லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நோட்டீஸ் அளித்துள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர மறுத்த மத்திய பா.ஜ.க அரசு மீது தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ் அளித்துள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இந்த நிலையில் மத்திய பா.ஜ.க அரசு மீது காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்துள்ளது. லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்தநோட்டீஸை அளித்துள்ளார். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வரும் 27-ந் தேதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே நோட்டீஸில் வலியுறுத்தியுள்ளார். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து