முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெம்பக்கோட்டை வட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிய மூன்று பட்டாசுத் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர், -விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகளில் சமீப காலங்களாக விபத்துக்கள் தொடர்ந்து வருவதால் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் இயங்கி வரும் பட்டாசுத் தொழிற்சாலைகளில் விதிமுறை மீறல்களை கண்காணிக்கும் பொருட்டு 09 துணை ஆட்சியர்களும், 15 வட்டாட்சியர்களும் ஆய்வுப் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனடிப்படையில்   விருதுநகர் மாவட்ட துணை ஆட்சியர்                   (கலால் பிரிவு) திரு. சங்கரநாராயணன், வெம்பக்கோட்டை பகுதிகளில் திடீர் ஆய்வு செய்யும் பணி மேற்கண்ட போது, வெம்பக்கோட்டை வட்டம் சேர்வைக்காரன்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த மனிஷா பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளர்  முனியசாமி என்பவர் ஏழாயிரம் பண்ணை கிராமத்தைச் சேர்ந்த ரத்;தினசாமி மகன் நடராஜமூர்த்தி என்பவருக்கு சட்டவிரோதமாக குத்தகைக்கு விடப்பட்டு பட்டாசு உற்பத்தி செய்து வந்துள்ளதும், அனுமதிக்கப்படாத இடங்களான இரசாயணப்பொருள் நிரப்பும் திரிவெட்டும் அறை), மேகசின் அறை ஆகிய அறைகளில் தொழிலாளர்களை பட்டாசு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதும், அனுமதிக்கப்பட நபர்களைக் காட்டிலும் கூடுதலாக பணியாளர்களை அமர்த்தி பணி புரிந்து வந்துள்ளதும், மரங்களின் கீழே உற்பத்தி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதும், உற்பத்தி செய்யப்பட்ட வெடிகள் உலர்மேடையில் காயவைக்கப்படாமல் அறைகளைச் சுற்றி வெளியில் காய வைக்கப்பட்டுள்ளதும் கழிவு மருந்துப் பொருட்கள் ஃ கழிவு வெடிகள் கடந்த ஒரு வார காலமாக அகற்றப்படாமல் தேக்கி வைக்கப்பட்டுள்ளதும் ஆய்வின் போது கண்டறியப்பட்டது.
இவ்வாறு சட்டவிரோதமாக குத்தகை அடிப்படையில் பட்டாசுகள் உற்பத்தி செய்து வந்த குத்தகைதாரர் நடராஜமூர்த்தி மற்றும் உரிமையாளர் திரு முனியசாமி ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், மேற்படி பட்டாசுத் தொழிற்சாலையில் பட்டாசு உற்பத்தி செய்வதற்கு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்ட கங்கரக்;கோட்டை கிராமத்தில் இயங்கி வரும் ஆர்.ஆர் பயர் ஒர்க்ஸ் பேக்டரி மற்றும் சங்கரபாண்டியபுரம் கிராமத்தில் இயங்கி வரும் சக்தி மாரியம்மாள் பயர் ஒர்க்ஸ் பேக்டரி ஆகிய பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கும் இந்திய படைக்கலச் சட்டம், 1959, பிரிவு 17(3)(டி)-ன் படி மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை தற்காலிக நிறுத்தம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது போல முறையின்றி செயல்படும் மற்ற தொழிற்சாலைகளின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்  அ.சிவஞானம்,  தெரிவித்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து