முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுப்பணித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளைதேனி மாவட்ட கலெக்டர் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 20 ஏப்ரல் 2018      தேனி
Image Unavailable

 தேனி, - தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதார அமைப்பு) சார்பில் மஞ்சளாறு வடிநிலக்கோட்டத்தின் கீழ் ரூ.21.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
   இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதார அமைப்பு) சார்பில் பெரியகுளம் மஞ்சளாறு வடிநிலக்கோட்டத்தின் கீழ் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு (நபார்டு) வங்கியின் மூலம் பெரியகுளம் வராகநதி ஆற்றில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி, நீர்வள நிலவள (இரண்டாம் கட்டம்) த்திட்டத்தின் கீழ் நந்தியாபுரம் அணைக்கட்டு கட்டுமானப்பணி, கோரைக்குளம் கண்மாய், பட்டத்திக்குளம் கரைப்பலப்படுத்தும் பணி ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    ஆய்;விற்குப்பின் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், தமிழக அரசு பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதார அமைப்பு) மூலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், குளங்கள், வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல் மற்றும் கலிங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கள் மூலம் நீர்நிலைகளை பாதுகாத்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், நமது மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் (நீர்வள ஆதார அமைப்பு) சார்பில் பெரியகுளம் மஞ்சளாறு வடிநிலக்கோட்டத்தின் கீழ் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு (நபார்டு) வங்கியின் மூலம் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் பெரியகுளம் வராகநதி ஆற்றில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவுரும் போது மழை வெள்ள நீர் ஊருக்குள் புகாதவாறு தடுக்கப்படும்.
   நீர்வள நிலவள (இரண்டாம் கட்டம்) த்திட்டத்தின் கீழ் பெரியகுளம் வட்டத்தில் வராகநதி வடிநிலத்தில் 16 கண்மாய்கள், 4 அணைக்கட்டுகள், 11 வழங்கு வாய்க்கால்கள் ரூ.4.19 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் நந்தியாபுரம் அணைக்கட்டு 86 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு வருகிறது. இந்த அணைக்கட்டின் வாயிலாக 450 ஏக்கர் நிலங்களும், பொட்டைக்குளம், கைக்கிலான் குளம் மற்றும் பட்டத்திக்குளம் ஆகிய குளங்களின் கரைகள், மதகுகள், வழிந்தோடும் கரைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 288.84 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.  மேலும், கோரைக்குளம் கண்மாய் ரூ.2.51 கோடி மதிப்பீட்டில் இரண்டு கண்மாய்கள், ஒரு அணைக்கட்டு, ஒரு வழங்கு வாய்க்கால் புனரமைக்கும் பணிகளான மதகுகள், வழிந்தோடும் பாதகைகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் 1,648.65 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.
   செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மஞ்சளாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தங்கவேல், உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வன் உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து