முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினகரன் - திவாகரன் சண்டை ஒரு நாடகம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை  : தினகரன் - திவாகரன் பங்காளிகள் சண்டை ஒரு நாடகம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மோதல் வெடித்தது...

சசிகலா குடும்பத்தில் பயங்கர மோதல் வெடித்துள்ளது. தினகரனின் தனிக் கட்சி தொடங்கியது, சசிகலா புறக்கணிப்பு என பல்வேறு குற்றச்சாட்டுக்களை திவாகரனும் அவரது மகன் ஜெயானந்தும் கூறி வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் குற்றச்சாட்டுக்கு தினகரன் பதிலளித்துள்ளார். அதாவது சசிகலாவை பெங்களூரு சிறைக்கு சென்று கூட பார்க்காதவர் திவாகரன் என அவர் சாடினார்.

தினகரன் பாய்ச்சல்

குடும்ப உறுப்பினர்களுக்கு மரியாதை அளிப்பதாகவும் அதற்காக அவர்களுக்கு கட்டுப்பட முடியாது என்றும் தினகரன் தெரிவித்தார். சசிகலா மீது காட்ட முடியாத கோபத்தை என் மீது திவாகரன் காட்டுகிறார்; சசிகலாவை பற்றி திவாகரன் எப்படியெல்லாம் பேசினார் என்பது எனக்கு தெரியும் என்றும் தினகரன் கூறினார்.

சண்டை ஒரு நாடகம்

இந்நிலையில் திவாகரன் - தினகரன் இடையிலான மோதல் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இருவருக்கும் இடையே நடப்பது பங்காளி சண்டை அதை கவனிப்பது எங்கள் வேலை இல்லை. ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் நாங்கள் அவர் விட்டு சென்ற பணிகளை செவ்வனே செய்வதில் உறுதியாக உள்ளோம். அந்த பணிகளே ஆயிரம் இருக்கிறது என்றார்.
ஜெயலலிதாவை அடக்கம் செய்யும்போது அவரை முன்னாள் முதல்வராகவே அடக்கம் செய்து விட்டதாக வெற்றிவேல் குற்றம்சாட்டியிருப்பது பற்றி கேட்டபோது, இதை அந்த குடும்பத்திடம் தான் கேட்க வேண்டும். யாரையுமே பார்க்க விடாமல் ஆதிக்கம் செலுத்தியது அந்த குடும்பம் தானே என்றார். தினகரன் - திவாகரன் மோதல் என்பது நாடகம் அரங்கேறும் வேளை தான், உச்சக்காட்சி நடக்குதம்மா என்ற பாடல் திரைப்படத்தில் உண்டு, அந்த உச்சக்கட்ட காட்சி தான் இப்போது நடக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து