முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 1 - பிளஸ் 2 வகுப்பு மொழி பாடங்களுக்கு இனி ஒரே தேர்வுத்தாள் - தமிழக பள்ளிக்கல்வித் துறை திட்டம்

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான மொழிப்பாடங்களின் 2 தாள்களை ஒன்றாக்கி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு தேர்வுகள்...

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில், தற்போது உள்ள கல்வித்திட்டத்தின்படி பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ வகுப்பு மொழிப்பாடங்களுக்கு தாள் 1, தாள் 2 என இரண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மொழிப்பாடங்களுக்கு 4 தேர்வுகளை மாணவர்கள் எழுதுகின்றனர். இது தவிர முதன்மை பாடங்களுக்காக 4 தேர்வுகள் உள்ளன. அவற்றையும் சேர்த்து 10 தேர்வுகளை மாணவர்கள் எழுதுகின்றனர். மாணவர்களின் இந்த தேர்வுச் சுமையை குறைப்பதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே தேர்வாக...

இதற்காக மொழிப்பாடங்களின் தாள் 1, தாள் 2 தேர்வுகள் இரண்டையும் இணைத்து ஒரே தேர்வாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் ஆகிய இரண்டு பாடங்களையும் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் 4 முக்கிய பாடங்களிண் எண்ணிக்கையை மூன்றாக குறைக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த மாற்றத்தைக் கொண்டு வர டெல்லியிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து