முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்: மதுரையில் வெகுவிமர்சையாக நடந்தது

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2018      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை, மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதன் மூலம் நேற்று முதல் மதுரையில் அம்மனின் ஆட்சி தொடங்கி விட்டது.

மதுரை என்றால் நினைவுக்கு வருவது சித்திரை திருவிழா. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகையில் எழுந்தருளல் என சுமார் 20 நாட்கள் இந்த விழா களைகட்டும். இதில் முதலில் வரும் மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் வீதியுலா நடைபெற்று வருகிறது. இரவில் நடைபெறும் வீதியுலாவின் போது சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் அடித்து ஆடிப்பாடி வருவதும், மீனாட்சி அம்மன் வேடமணிந்து வருவதும் மிகவும் சிறப்பானதாக உள்ளது.

விழாவின் 8-ம் திருநாளான நேற்று இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. இரவு 7.45 மணிக்கு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் இந்த பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மீனாட்சி அம்மனுக்கு ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராய கிரீடம் சாற்றப்பட்டு செங்கோல் வழங்கப்பட்டது. அது போல் 4 மாத காலத்திற்கு மதுரை நகரில் மீனாட்சி அம்மனின் ஆட்சி நடைபெறுவதாக வரலாறு கூறுகிறது. இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து