முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வீச்சில் தமிழக இளைஞர் மரணம்: காஷ்மீர் அரசுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : காஷ்மீரில் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் பலியான தமிழக இளைஞரின் மரணத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை காஷ்மீர் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து நேற்று டெல்லியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் நிர்மலா சீதாராமன் பேசும் போது,

இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. பயங்கரவாதிகள் வலிமையாக இருப்பதற்கு பாதுகாப்புப் படைகள் பொறுப்பேற்க முடியாது. காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி தனது மாநிலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், காஷ்மீர் கல்வீச்சு சம்பவத்தில் ஒரு சுற்றுலாப் பயணி காயப்பட்டு இறந்திருக்கிறார் என்றால், நிறைய சுற்றுலாப் பயணிகள் தங்கள் மாநிலத்துக்கு வர வேண்டும் என்ற காஷ்மீர் முதல்வரின் விருப்பம் சரியானது அல்ல. காஷ்மீர் அரசு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து