வருமான வரித்துறை முக்கிய அறிவிப்பு
.jpg?itok=G7hs_QLs)
வரி ஏய்ப்பு, பினாமி சொத்துகள் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு வருமான வரித்துறை சன்மானம் வழங்குகிறது. இந்த பரிசினை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று வரித்துறை கூறியுள்ளது.
இது தொடர்பாக வருமான வரித்துறை மேலும் தெரிவிக்கையில், தகவல் அளிப்பவர்களுக்கான ஊக்கத் தொகையை உரிய நேரத்தில் அளிப்பதில் பல ஆண்டுகளாகவே சிக்கல் இருந்து வருகிறது. அதைக் களைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக வருமான வரித்துறை பரிசுத் திட்டம் 2018 என்கிற புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. கறுப்பு பண ஒழிப்புக்கு துணை நின்றவர்கள் தங்களது ஆதார் எண்ணை அளித்து இதுவரையிலான நிலுவை பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
View all comments