முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனக்பூர் - அயோத்தி பேருந்து சேவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 11 மே 2018      இந்தியா
Image Unavailable

காத்மாண்ட்: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்றடைந்தார். அந்நாட்டில் இருந்து அயோத்திக்கு பேருந்து சேவையை அவர் தொடங்கி வைத்தார்.

சுற்றுலாபயணி...
கர்நாடகத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை முடித்த நிலையில் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று நேபாளம் சென்றடைந்தார். நேபாளம் தலைநகர் காத்மாண்டிலிருந்து 225 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஜனக்பூருக்கு வந்தடைந்த மோடியை நேபாளம் பிரதமர் கே.பி.சர்மா ஒளி வரவேற்றார். பின்னர் ஜனக்பூரிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி இடையே சுற்றுலா பயணிகளுக்கான பேருந்து சேவையை மொடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அங்கு நடைபெறும் பொது கூட்டத்தில் உரையாற்றினார்.

அண்டை நாடுகளுமே...
இதன் பின்னர் மதியம் காத்மாண்டில் நேபாள அதிபர் பிந்தியா தேவியை மோடி சந்தித்து பேசினார். நேபாளம் பயணம் குறித்து மோடி கூறுகையில் ‘‘இமாலய பிரதேசமான நேபாளத்துக்கான எனது பயணம் அண்டை நாடுகளுமே முதல் உரிமை என்ற எங்கள் அரசின் நிலைப்பாட்டை காட்டுக்கிறது. இந்தியாவின் பழைய நண்பனான நேபாளத்துடன் நெருக்கமான உறவை பிரதிப்பலிக்கிறது” என்று கூறினார். பிரதமராக நேபாளத்துக்கு மோடி மேற்கொள்ளும் 3-வது பயணம் இதுவாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து