கர்நாடக வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      இந்தியா
pm modi thanks 2017 12 18

புது டெல்லி : பா.ஜ.க.வுக்கு வாக்களித்த கர்நாடக வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. மறுபக்கம் 2-வது இடத்தைப் பிடித்த காங்கிரசும், 3-வது இடத்தைப் பிடித்த மதச்சார்பற்ற ஜனதாதளமும் கை கோர்த்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளன.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்து டுவீட் போட்டுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டுவீட்டில், பா.ஜ.க.வின் வளர்ச்சி அரசியலுக்கு உறுதியாக ஆதரவளித்து வாக்களித்த கர்நாடக சகோதரர்கள், சகோதரிகளுக்கு எனது நன்றிகள். பா.ஜ.க.வை கர்நாடகத்தில் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெறச் செய்ததற்கும் நன்றி தெரிவிக்கிறேன். இரவு பகலாக பாடுபட்டு, கட்சியின் வெற்றிக்காக உழைத்த கர்நாடக பா.ஜ.க. தொண்டர்கள் அனைவரையும் நான் வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து