முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாடானையில் கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 15 மே 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா அலுவலகத்தில் திருவாடானை வட்டத்திற்குட்பட்ட ஆனந்தூர் உள்வட்டம் கிராமங்களுக்கான 1427-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. 
 ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களுக்குட்பட்ட  வருவாய் கிராமங்களுக்கான  தீர்;வாய தணிக்கை இன்று (15.05.2018) தொடங்கி  24.05.2018 வரை நடைபெறுகின்றது.  அதன்படி, திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் வருவாய் தீர்;வாய கணக்கு தணிக்கை நடைபெற்றது. வருவாய் தீர்;வாய தணிக்கையின் முதல் நாளில் ஆனந்தூர் உள்வட்டத்திற்குட்பட்ட  சாத்தனூர், ஆணையார்கோட்டை, ராதானூர், கோவிந்தமங்களம், ஓடக்கரை, ஆனந்தூர், திருத்தேர்வலை, கொக்கூரணி, சேத்திடல், வரவணி, செங்குடி ஆகிய 11 வருவாய் கிராமங்களுக்கான தணிக்கை நடைபெற்றது. இத்தணிக்கை முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நில அளவைக் கருவிகள் சரியான நிலையில் உள்ளனவா என்பது குறித்தும், வருவாய் கிராம கணக்குகள் குறித்த பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்தும் தணிக்கை செய்தார். மேலும் இந்த தணிக்கையின் போது  மேற்குறிப்பிட்டுள்ள கிராமங்களைச் சார்ந்த  பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள். 
 குறிப்பாக வட்டாணம் கிராமப்பகுதி மக்கள் தங்களது கிராமத்தில் குடிநீர்; தேவையினை பூர்த்தி செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை மனு வழங்கினார்கள்.  அம்மனுவிற்கு உடனடி தீர்வாக வட்டாணம் கிராமத்தில் புதிதாக உப்புநீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட ஊராட்சிகளின் உதவி இயக்குநரிடத்தில் உத்தரவிட்டார்.  அதேபோல சேத்திடல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கிராமத்தில் புதிய குடிநீர்; ஆதாரம் ஏற்படுத்திட வேண்டி கோரிக்கை மனு வழங்கினார்கள்.  அம்மனு மீதான உடனடி நடவடிக்கையாக சேத்திடல் கிராமத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் ஆழ்குழாய் கிணறு அமைத்திட உத்தரவிட்டார்கள். இதுதவிர பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தணிக்கையின் போதே 10 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், 10 நபர்களுக்கு வீட்டுமனை ஒப்படைப்பு ஆணைகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

 அதனையடுத்து, திருவாடானை வட்டத்திற்குட்பட்ட ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு போதிய அளவு குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்திட வேண்டும் எனவும், அதற்கேற்றவாறு தேவையான புதிய குடிநீர் ஆதாரங்களை உருவாக்குவது குறித்து சம்பந்தப்பட்ட  கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் ஒருங்கிணைந்து கள ஆய்வு செய்து உயர்அலுவலர்களின் உத்தரவின் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இதுதவிர கிராமப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடங்கள், அனைத்து நிலை அரசு பள்ளி கட்டிடங்கள் மற்றும் கிராம ஊராட்சி சேவை மையங்களில் போதிய குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கழிப்பறைகளுக்கான தண்ணீர் வசதி ஆகியவை நூறு சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும்;.  அதேபோல நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் சாலை ஆக்கிரமிப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்து எவ்வித பாரபட்சமுமின்றி அகற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
 மேலும், 16.05.2018 அன்று ஆர்.எஸ்.மங்களம் உள்வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கும், 17.05.2018 அன்று மங்களக்குடி உள்வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கும், 18.05.2018 அன்று புல்லூர் உள்வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கும், 22.05.2018 அன்று சோழந்தூர் உள்வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கும், 23.05.2018 அன்று தொண்டி உள்வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கும்,  24.05.2018 அன்று திருவாடானை உள்வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கும் என முறையே மாவட்ட கலெக்டர் தலைமையில் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை நடைபெறவுள்ளது. எனவே மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் சம்பந்தப்பட்ட கிராம பொதுமக்கள் தணிக்கை முகாம்களில் அதிகளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி உடனடி தீர்;வு காணலாம். 
  இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (நில அளவை) சி.ஜெயக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) கே.கே.கோவிந்தன், திருவாடானை வட்டாட்சியர் மா.சாந்தி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் நடராஜன் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து